“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி”..! பீகார் தேர்தலில் “ஐரோப்பா ரிட்டர்ன்” வேட்பாளர் பரபரப்பு புகார்

10 November 2020, 3:30 pm
Pushapm_Priya_Plurals_Party_UpdateNews360
Quick Share

பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக புளூரல்ஸ் கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். அங்கு 243 சட்டமன்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணும் பணி இன்னும் நடைபெற்று வருகின்றன. 

லண்டனில் படித்துவிட்டு திரும்பிய புஷ்பம் பிரியா சவுத்ரி, புளூரல்ஸ் கட்சியைத் தொடங்கி பீகார் தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார். 

புளூரல்ஸ் கட்சிக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குகள் அனைத்து சாவடிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றப்பட்டன என்று அவர் கூறினார். பாட்னாவில் உள்ள பாங்கிபூர் மற்றும் மதுபனி மாவட்டத்தில் பிஸ்ஃபி ஆகிய இரு இடங்களிலிருந்து சவுத்ரி தேர்தலில் போட்டியிட்டார்.

இதற்கிடையில், ஈ.வி.எம் கள் வலுவானவை மற்றும் சேதப்படுத்த முடியாதவை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. “ஈ.வி.எம் கள் வலுவானவை மற்றும் சேதப்படுத்த முடியாதவை என்று மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஈ.வி.எம்-களின் ஒருமைப்பாட்டை உச்ச நீதிமன்றம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறுதி செய்தது. தேர்தல் ஆணையம் 2017’இல் ஈ.வி.எம் சவாலை வழங்கியது. ஈ.வி.எம்-களின் நேர்மை குறித்த எந்த சந்தேகமும் இல்லை.” என துணைத் தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் இன்று தெரிவித்தார்.

28 வயதான புஷ்பம் பிரியா சவுத்ரி, அவர் போட்டியிட்ட இரு சட்டமன்ற இடங்களிலும் பலத்த தோல்வியைச் சந்தித்துள்ளார். பிஸ்ஃபி தொகுதியில், நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்றார்.

2030’க்குள் பீகாரை ஐரோப்பாவாக மாற்றுவதாக சவுத்ரி தேர்தலில் உறுதியளித்திருந்தார். அவரது தந்தை வினோத் சவுத்ரி ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமாருடன் நெருக்கமாக உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மாமா வினய் சவுத்ரியும் பீகார் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Views: - 17

0

0

1 thought on ““மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி”..! பீகார் தேர்தலில் “ஐரோப்பா ரிட்டர்ன்” வேட்பாளர் பரபரப்பு புகார்

Comments are closed.