ஜெகன் மோகனை சந்தித்து வாழ்த்து பெற்ற பி.வி.சிந்து

Author: kavin kumar
6 August 2021, 8:33 pm
Quick Share

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனை நேரில் சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார் .

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார். விஜயவாடாவில் உள்ள ஆந்திர தலைமை செயலகத்திற்கு வந்த பி.வி.சிந்துவுக்கு பொன்னாடை போத்தியும், மலர் கொத்து வழங்கியும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றார். பின்னர், சிந்துவிடம் பதக்கத்தை வாங்கி ஆர்வத்துடன் பார்த்த அவர், விசாகப்பட்டினத்தில் விரைவில் பேட்மிண்டன் அகாடமி தொடங்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து அரசு சார்பாக பி.வி.சிந்துவுக்கு ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் பி.வி.சிந்து சுவாமி தரிசனம்
செய்தார்.

Views: - 346

0

0