‘அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது அவசியம்’: குடியரசுத் தலைவரை சந்தித்த ராகுல், பிரியங்கா..!!

Author: Aarthi Sivakumar
13 October 2021, 3:16 pm
Quick Share

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் பேரணியின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர்.

லக்‍கிம்பூர் கேரி வன்முறை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள்  குடியரசுத் தலைவருடன் சந்திப்பு… – www.patrikai.com

இது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் குடிராம்நாத் கோவிந்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத் மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய அவர்கள், லக்கிம்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மனு அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவை பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்றும், லக்கிம்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்காதவரை விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் லக்கிம்பூர் விவகாரத்தை விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம் தொடர்பாக உடனடியாக மத்திய அரசுடன் கலந்துரையாடுவதாக குடியரசுத் தலைவர் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

Views: - 129

0

0