பாரில் நடந்த இரவு பார்ட்டியில் ராகுல் காந்தி : வீடியோவை வெளியிட்ட பாஜக… விமர்சனத்திற்கு பதில் அளிக்குமா காங்கிரஸ்? (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 12:11 pm
Rahul Night Party - Updatenews360
Quick Share

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியின் உள்கட்டமைப்பை சரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால் பல வியூகங்களை அக்கட்சி அமைத்து வருகிறது. குறிப்பாக மீண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க அக்கட்சி திட்டமிட்டது.

ஆனால் கட்சியின் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் முகமாக உள்ள ராகுல் காந்தி சரியான தலைமையாக இருக்க மாட்டார் என பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராகுல்காந்திக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி எங்கே என்று கேள்வி கேட்டு பாஜக வெளியிட்டுள்ள வீடியோவில், பப்பில் ஒரு பார்ட்டியில் பங்கேற்ற ராகுல் காந்தி நேபால் நாட்டிற்கான சீன பெண் தூதுவருடன் இருப்பது போன்றும், பின்னணியில் வரும் இசையை கேட்டு ரசித்து கொண்டிருப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோ தேசிய அளவில் ட்ரெண்டாகி வரும் நிலையில், ஒரு தரப்பினர் எதிர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதே போல மற்றொரு தரப்பினர், ராகுல்காந்தி அவரின் தோழி திருமணத்திற்கு நேபாளம் காத்மாண்டு சென்றுள்ளாதகாவும், அங்குள்ள ஹோட்டலில் எடுக்கப்பட்ட வீடியோ என தகவல்கள் வெளியகியுள்ளது.

ஆனால் இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 688

0

0