மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் : காங்., எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தல்

15 June 2021, 3:32 pm
Rahul_Gandhi_UpdateNews360
Quick Share

கொரோனா பரவல் இந்தியாவில் சற்று குறைந்து வரும் நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2து அலை பரவல் கடும் மோசமாக இருந்தது. உலக நாடுகளையே மிஞ்சிய பலி எண்ணிக்கையும் இந்தியாவில் பதிவாகி வந்தன. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தாலும், கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

முதற்கட்டமாக 45 முதல் 60 வயதுடைய மக்களுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. பின்னர், மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும், 45 முதல் 60 வயதுடைய மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, நோய் பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கொரோனா முழுவதுமாக விலகிவிடவில்லை. இந்த அச்சுறுத்தலான சூழலில், மக்கள் அனைவரும் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிப்பதுடன், தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 195

0

0