ராகுல்காந்தி ஒரு விஐபி விவசாயி: விமர்சனம் செய்த மத்திய அமைச்சர்….!!!

Author: Aarthi
6 October 2020, 11:11 am
raghul tractor - updatenews360
Quick Share

டிராக்டர் பேரணியில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்தும் ராகுல்காந்தி ஒரு விஐபி விவசாயி என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்துள்ளார்.

smiruthi irani - updatenews360

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடத்தும் 3 நாள் டிராக்டர் பேரணி நேற்றுமுன்தினம் தொடங்கியது.

2வது நாளாக டிராக்டர் பேரணி நேற்று பஞ்சாபில் நடைபெற்றது. அவரது இந்த டிராக்டர் பேரணியை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார்.

இதுபற்றி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ராகுல்காந்தி டிராக்டர் பேரணியில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்துகிறார். ராகுல்காந்தியை போன்ற ‘விஐபி விவசாயி’களால் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து சிறு, குறு விவசாயிகளை விடுவிக்கும் சட்டத்தை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டங்கள் குப்பையில் போடப்படும் என்று ராகுல்காந்தி கூறியது பற்றி, கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆட்சிக்கு வரும் ராகுல்காந்தியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பதிலடி கொடுத்துள்ளார்.

Views: - 45

0

0