2 நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு செல்கிறார் ராகுல்காந்தி: மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் சாமி தரிசனம்..!!

Author: Aarthi Sivakumar
9 September 2021, 8:34 am
raghul gandhi - updatenews360
Quick Share

ஜம்மு-காஷ்மீர்: ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று ஜம்மு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று ஜம்மு செல்கிறார். காட்ராவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக்கோவிலில் வழிபடும் ராகுல், கட்சி தலைவர்கள், தொண்டர்களுடனும் உரையாடுவார் என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

ஜம்முவுக்கு வருகை தரும் ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று வழிபடும் ராகுல் காந்தி, நாளை ஜம்முவில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் உரையாடுவார். பிற்பகலில் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்வார் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் ஜம்மு காஷ்மீருக்கான காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான ரஜ்னி பாட்டீல் நேற்று முன்தினம் ஜம்மு வந்தார். ராகுல் காந்தி வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். ரஜ்னி பாட்டீல் தலைமையில் நடைபெற்ற ஒரு உயர்மட்ட குழு கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அவர்கள், ராகுல் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்களை ரஜ்னி பாட்டீலிடம் விளக்கினர் என செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Views: - 323

0

0