“உ.பி. எவ்ளோ கொடுத்தாலும் இத்தாலியைத் தான் விரும்புகிறார்கள்”..! ராகுல் காந்தியை விளாசிய யோகி ஆதித்யநாத்!

24 February 2021, 8:45 pm
Yogi_Adityanath_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று, வடக்கு மற்றும் தெற்கு என பிரிவினை அரசியல் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை கண்டித்து உரையாற்றினார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரித்தாளும் அரசியல் செய்வதாகக் கூறினார்.

“உத்தரபிரதேசத்திலிருந்து பல முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய கட்சியின் தலைவரின் அறிக்கையை நான் கேட்டுக்கொண்டிருந்தேன், அவர் கேரளாவில் பேசும்போது, உத்தரபிரதேச மாநில மக்களை கேலி செய்கிறார். மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்.” என உத்தரபிரதேச சட்டமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து பேசியபோது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

ராகுல் காந்தி என்று பெயரிடாமல், யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் பிளவு மனப்பான்மை தேசிய பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். முதலமைச்சரின் கருத்துக்கள் காங்கிரஸ் தரப்பு எம்எல்ஏக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றது.

முன்னதாக, திருவனந்தபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “முதல் 15 ஆண்டுகளாக நான் வடக்கில் ஒரு எம்.பி.யாக இருந்தேன். நான் வேறு வகையான அரசியலுடன் பழகிவிட்டேன்.

என்னைப் பொறுத்தவரை, கேரளாவுக்கு வருவது திடீரென்று நான் மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. மக்கள் சிக்கல்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலோட்டமாக மட்டுமல்லாமல் சிக்கல்களில் விரிவாக செல்கிறார்கள்.” என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த மனநிலையே தேசிய பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று யோகி ஆதித்யநாத் கூறினார். அமேதியும் உத்தரபிரதேசமும் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு போதுமான வாய்ப்புகளை அளித்தன. ஆனால் அவர்கள் தங்கள் தொகுதிகளுக்கு வருவதற்கு பதிலாக இத்தாலிக்கு செல்ல விரும்பினர் என்று மேலும் கூறினார்.

2004 முதல் மக்களவையில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ராகுல் காந்தி, 2019 பொதுத் தேர்தலில், தோல்வி பயத்தால் கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து போட்டியிட்டார். அவர் அமேதியை பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் இழந்தாலும், கேரளாவில் உள்ள காங்கிரஸ் கோட்டையில் இருந்து வென்றார்.

ரே பரேலி மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கோட்டைகளாக இருந்தன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மக்களவைத் தொகுதியாக ரே பரேலி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

1

0