அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியான விவகாரம்…! ராகுல் காந்தி என்ன சொன்னார் தெரியுமா?

2 August 2020, 9:10 pm
Rahul_Gandhi_UpdateNews360
Quick Share

சென்னை: உள்துமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இந்த தகவலை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அமித்ஷா விரைவில் குணம் பெற வேண்டும் என்று அனைத்து மாநில பாஜக முதலமைச்சர்கள், பாஜக தலைவர்கள், தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் தரப்பில் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும், நடிகையுமான குஷ்புவும் டுவிட்டரில் அமித்ஷா குணம் பெற வாழ்த்து தெரிவித்தார். இந் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியும் டுவிட்டரில்  அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.

Views: - 50

0

0