அரசியல் கட்சி தலைவர்களை சட்டவிரோதமாக அடைப்பதா..? ராகுல் காந்தி டுவீட்

2 August 2020, 2:41 pm
rahul - updatenews360
Quick Share

டெல்லி: அரசியல் கட்சி தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியாவதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வீட்டு சிறையில்  வைக்கப்பட்டுள்ளனர். மெஹபூபா முப்தியின் காவல் வரும் 5ம் தேதியுடன் முடிகிறது. அவரது வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மாநில உள்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும்.மெஹபூபா முப்தியை விடுவிக்க வேண்டிய சரியான தருணம் இதுதான் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 9

0

0