காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநடப்பு: நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பரபரப்பு!

14 July 2021, 10:53 pm
Rahul_Gandhi_UpdateNews360
Quick Share

டெல்லி: நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திடீரென வெளிநடப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று டெல்லியில் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கூடியது. இதில் அனைத்து கட்சிகளின் முக்கிய எம்பிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு விவகாரங்களான பாகிஸ்தானுடனான பிரச்சினை, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவுடனான மோதல், ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது கோரிக்கை ஏற்படாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து டோக்லாம் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதல் குறித்து பேச விவாதிக்க வலியுறுத்தியும்

அது ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்ததாக ராகுல்காந்தி கூறி அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவர் ஜூயல் ஓரம் கூறுகையில், “ கண்டோன்மெண்ட் போர்டுகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்க மட்டுமே கூட்டத்தின் விவாதிக்க திட்டமிடப்பட்டது. எனவே, அது பற்றி மட்டுமே விவாதிக்க முடியும். வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்பினால், அதற்கான விதிகளை பின்பற்றி 14 நாட்கள் முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்றார்.

Views: - 113

0

0