ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனையால் பரபரப்பு… கொந்தளித்த காங்கிரஸ் : போராட்டத்தில் குதித்த நிர்வாகிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 12:59 pm
Rahul - Updatenews360
Quick Share

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இவ்வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ராகுலுக்கு தண்டனை வழங்கிய விபரம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை சட்டப்பேரவை வளாகம் முன்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கும்பகோணத்தில் ரயிலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட 4 பேரை கைது செய்த

Views: - 127

0

0