மத்திய அரசின் நடவடிக்கையால் நாடு படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது : ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!

13 September 2020, 4:31 pm
Quick Share

கொரோனா தொற்று பரவல் மற்றும் அதற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இது குறித்து அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கை ஏழை மக்கள் மீதான தாக்குதல் என குறிப்பிட்டார். இதனால் தினக்குலிகள் தான் பெரும் அலத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாககவும் அவர் கூறியிருந்தார்.

இந்த சூழலில் இன்று மீண்டும் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவு உள்நாட்டு உற்பத்தி 24 சதவீதம் குறைந்துள்ளது என குற்றம் சாட்டினார்.

கொரோனாவுக்கு எதிரான போரை சரியாக திட்டமிடாமல் நடத்துவதால் இந்தியா படுகுழியில் விழுந்துள்ளது என தெரிவித்துள்ள ராகுல்காந்தி, 12 கோடி வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ரூ.15½ லட்சம் கோடி கூடுதல் கடன் சுமை ஏற்பட்டு இருப்பதாகவும், உலக அளவில் கொரோனா பாதிப்பும், சாவும் மிகவும் உயர்ந்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இவ்வளவு பாதிப்புகள் இருந்தும், இந்தியாவில் நிலைமை நன்றாக இருப்பதாக மத்திய அரசு கூறுவதாகவும் அவர் குற்றம் சாடியுள்ளார்.

Views: - 5

0

0