வாவ்.. வாட் எ கட்ஸ்! பிட்னஸ் டிப்ஸ் தாருங்கள் ராகுல்.. டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்

1 March 2021, 8:31 am
Quick Share

கேரளா சென்றிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடலில் நீச்சல் அடித்தபின், படகில் ஈரம் சொட்ட நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. சிக்ஸ் பேக் இருப்பது போல் ராகுல் வயிற்றுப்பகுதி தெரிய, அவரிடம் நெட்டிசன்கள் டிப்ஸ் கேட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிராமத்து சமையலில் அவர் தயாரித்த காளான் பிரியாணி டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. இந்நிலையில், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, கேரளா சென்றிருந்தார் ராகுல் காந்தி.

அங்கு மீனவர்களை சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுடன் உரையாடினார். அவர்களுடன் கடலில் வலை விரித்து மீன்களை பிடித்தார். அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டார். தொடர்ந்து, கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடலில் குதித்து மீனவர்களுடன் அவர் நீந்தி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் அனைத்தும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், அதில் ஒரு புகைப்படத்தில், உச்சி முதல் பாதம் வரை ஈரம் சொட்ட சொட்ட ராகுல் காந்தி நிற்க, அவரது வயிற்றுப்பகுதி சிக்ஸ் பேக் இருப்பது போல் காட்சி அளிக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அவரிடம் பிட்னஸ் ரகசியம் குறித்து டிப்ஸ் கேட்டு டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட, அது மீண்டும் வைரலாகி உள்ளது.

அதில் சில டுவிட்கள்..

Views: - 5

0

0