ரயில்வே காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை : பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 5:01 pm
Police Suicide - Updatenews360
Quick Share

ஆந்திரா : ரேணிகுண்டா ரயில்வே காவல் நிலையத்தில் ரயில்வே காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி அடுத்த ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த கங்காதர் என்பவர் ரயில்வே போலீசாக ரேணிகுண்டா ரயில்வே காவல் நிலையத்தில் பணியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை காவல் நிலையம் அருகே தான் தங்கியிருந்த பகுதியில் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

ரயில்வே போலீசார் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 605

0

0