ஒரு மாதத்தில் 10.81 கோடி டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே துறை…!!

2 November 2020, 12:04 pm
goods railway - updatenews360
Quick Share

அக்டோபர் மாதத்தில் சரக்கு ரயில்களில் 10 கோடியே 81 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சாலைப் போக்குவரத்து தடைபட்ட போதும், சரக்கு போக்குவரத்து நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து தக்க வைப்பதுடன் மேலும் ஊக்குவிப்பதற்காக உருக்கு, சிமெண்ட், மின்சாரம், நிலக்கரி, வாகன உற்பத்தித் தொழில்துறையின் தலைவர்களுடன் ரயில்வே துறை பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் பலனாக, அக்டோபர் மாதத்தில் சரக்கு ரயில்களில் 10 கோடியே 81 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 15 விழுக்காடு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Views: - 16

0

0