கோவில் நில ஆக்கிரமிப்பை எதிர்த்த பூசாரி..! தீயிட்டுக் கொளுத்திய மாபியா கும்பல்..!

By: Sekar
9 October 2020, 3:26 pm
Temple_Rajasthan_UpdateNews360
Quick Share

ராஜஸ்தானின் கரௌலியில் உள்ள சபோத்ரா பகுதியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க கோவில் பூசாரி தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பூசாரி 50 சதவீதம் தீக்காயங்களுக்கு ஆளானார்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதை எதிர்த்த பூசாரியை, லேண்ட் மாஃபியா என்று நம்பப்படும் ஆறு தாக்குதல்காரர்களும், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஊற்றி, கொளுத்தி விட்டுள்ளனர். நிலத்தின் ஒரு பகுதியை கோவில் அதிகாரிகள் பூசாரிக்கு பரிசாக அளித்ததாகவும், அவர் அங்கு ஒரு வீட்டைக் கட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாபுலால் என அடையாளம் காணப்பட்ட பூசாரி பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரௌலி எஸ்.பி. மிருதுல் கச்சாவா தெரிவித்தார். முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் கைலாஷ் மீனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதைத் தடுத்த பூசாரியை தீ வைத்து கொளுத்திய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே இந்த சம்பவத்தை கண்டித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.

Views: - 43

0

0