ஆகஸ்ட் 14 சட்டமன்றக் கூட்டம்..! தொடரும் அரசியல் நெருக்கடி..! ராஜஸ்தான் நிலைமை குறித்து ராஜ்நாத் சிங்குடன் பேசிய வசுந்தரா ராஜே..!

8 August 2020, 8:12 pm
Vasundhara_Raje_UpdateNews360
Quick Share

ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே இன்று கட்சியின் மூத்த தலைவரும் பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங்கை சந்தித்து மாநிலத்தின் அரசியல் நிலைமை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள வசுந்தரா ராஜே, பாஜக தலைவர் ஜே பி நட்டாவை நேற்று சந்தித்தார். மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷையும் அவர் சந்தித்திருந்தார்.

எனினும், இந்த கூட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

கடந்த மாதம் மாநிலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட நெருக்கடி வெடித்ததிலிருந்து, ஜெய்ப்பூரில் நடந்த பாஜக கூட்டங்களில் இருந்து அவர் பெருமளவில் மௌனம் காத்து வருவதாலும், கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடனான ராஜேவின் தொடர்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அவரும் அவருக்கு விசுவாசமான சில எம்.எல்.ஏக்களும் கிளர்ச்சி செய்ததை அடுத்து சச்சின் பைலட் துணை முதல்வர் பொறுப்பிலிருந்தும், காங்கிரசின் மாநில பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆட்சிக்குத் தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் கெலாட் இன்னும் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாகவும் பலர் நம்புகிறார்கள்.

இதற்கிடையே ஆகஸ்ட் 14 முதல் மாநில சட்டமன்றம் கூடுகிறது. அப்போது கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கிளர்ச்சியாளர்களின் ஆதரவோடு கெலாட் அரசாங்கத்தை கவிழ்க்க பாஜகவின் ஒரு பகுதியினர் ஆர்வமாக உள்ள நிலையில், வசுந்தரா ராஜே இது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் இருக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Views: - 5

0

0