ராஜ்யசபா, லோக்சபா டிவி ஒருங்கிணைப்பு: ‘Sansad’டிவி சேனல் துவக்கம்..!!

2 March 2021, 12:23 pm
lok shaba parliemnet - updatenews360
Quick Share

புதுடெல்லி: பார்லிமென்டின் நிகழ்ச்சிகளை லோக்சபா, ராஜ்யசபா என்னும் இரு டிவி சேனல்கள் ஒளிபரப்பிய நிலையில், அவற்றை ஒருங்கிணைத்து ‘சன்சத்’ டிவி துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பார்லிமென்டிற்கு என ஒருங்கிணைந்த டிவி சேனல் உருவாக்கப்பட்டதாக மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய சேனல் துவக்க விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சன்சத் டிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சேனலுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவிகபூர் சி.இ.ஓ.,வாக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சன்சத் என்பதற்கு பார்லிமென்ட் என்று பொருள். இந்த டிவி மூலமாக மக்கள் தங்களுடைய தொகுதி எம்.பி.,க்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 14

0

0