மாநிலங்களவையில் தொடர்ந்து அமளி… திரிணாமுல் காங்., எம்பிக்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அதிரடி..!!!

Author: Babu
4 August 2021, 6:23 pm
Rajya sabha - - updatenews360
Quick Share

டெல்லி : பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது.

இதுவரை நடந்த கூட்டத் தொடரில், ஒருநாள் கூட சரியாக இயங்காத நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசு இதனை ஏற்கவில்லை.

இருப்பினும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. அதேவேளையில், நாடாளுமன்றத்தை முடக்கும் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ய சபாநாயகர் முடிவு செய்திருந்தார்.

இன்று நாடாளுமன்றம் கூடியதும் வழக்கம் போல எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை கூடியதும், மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கி வரும் எம்பிக்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணை தலைவமான வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், டோலா சென், நதிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ்,சாந்தா சேத்ரி, அர்பிதா கோஸ், மவுசம் நூர். ஆகிய 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று ஒரு நாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 206

0

0