பயமுறுத்திய போலி ஐபிஎஸ் அதிகாரி..! பயந்து போய் பயணத்தை ரத்து செய்த வேளாண் சங்கத்தலைவர் ராகேஷ் டிக்கைட்..!

21 February 2021, 5:27 pm
Rakesh_Tikkait_UpdateNews360
Quick Share

காவல்துறை கண்காணிப்பாளர் என்ற பெயரில் ஒரு போலி அழைப்பால், சன்யுக்தா கிசான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் டிக்கைட், மகாராஷ்டிராவின் யவத்மாலுக்கான பயணத்தை ரத்து செய்துள்ள சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் மகாராஷ்டிரா வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்று போலி ஐபிஎஸ் அதிகாரி கூறினார். இதனால் பதறியடித்த ராகேஷ் டிக்கைட், எந்த உண்மையையும் ஆராயாமல் பயணத்தை நிறுத்தியுள்ளார்.

புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் ராகேஷ் டிக்கைட் நேற்று டெல்லியில் இருந்து முதல் பெரிய பொது உரையை நடத்தவிருந்தார்.

“எஸ்.பி. யவத்மால் என்று கூறி ஒரு நபரால் ராகேஷ் டிக்கைட் அழைக்கப்பட்டார். டிக்கைட் யவத்மாலுக்கு வந்தால், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்று அந்த ஐபிஎஸ் அதிகாரி கூறினார். டெல்லிக்கு அருகிலுள்ள காசிப்பூரில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு இதனால் இடையூறு ஏற்படலாம் என்பதால், டிக்கைட் பின்வாங்க முடிவு செய்தார்.” என்று கிசான் மோர்ச்சாவின் மகாராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த சந்தீப் கிடே-பாட்டீல் கூறினார்.

“அவர்கள் இன்னும் தங்கள் திட்டங்களை முன்னெடுக்க விரும்பினால், போலீசார் நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு பொறுப்பான முடிவை எடுக்கும்படி நான் அவர்களிடம் கேட்டேன். எனவே ராகேஷ் டிக்கைட் வரக்கூடாது என்று அவர்களே கூறுகிறார்கள்.” என்று போலீஸ் சூப்பிரண்டு திலீப் புஜ்பால் கூறினார்.

முன்னதாக யவத்மாலில் மாவட்ட நிர்வாகம் பிப்ரவரி 20’ஆம் தேதி விவசாயி தலைவர் ராகேஷ் டிக்கைட்டின் மகா பஞ்சாயத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது.

மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டாலும், சம்யுக்தா கிசான் மோர்ச்சா பொதுக் கூட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருந்தது. ஆனால் ஒரு போலி ஐபிஎஸ் அதிகாரியால் ராகேஷ் டிக்கைட் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

Views: - 1

0

0