டிராக்டர் பேரணிக்கு ஆயுதங்களுடன் வரச் சொன்ன வேளாண் அமைப்பின் தலைவர்..! வைரலாகும் வீடியோ..!

27 January 2021, 12:29 pm
rakesh_tikait_updatenews360
Quick Share

பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட்டின் ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதில் அவர் தனது ஆதரவாளர்களை குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு லத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது போல் உள்ளது. 

வீடியோவில், “அரசாங்கம் கேட்கவில்லை. உங்கள் குச்சிகள் மற்றும் கொடிகளுடன் வாருங்கள்” என்று கூறிய டிக்கைட், சிறிது இடைவெளி விட்டு, தனது ஆதரவாளர்களை நோக்கி, “எனது வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள். லத்திகளுக்கு மேல் கொடியைக் கட்டிக்கொண்டு வாருங்கள்.” எனக் கூறியுள்ளார்.

இந்த வைரல் வீடியோவைப் பற்றி கேட்கப்பட்டபோது, ​​பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர், கொடியைக் கட்டி உயர ஏந்திச் செல்வதற்குத் தான் லத்தியை கொண்டுவரச் சொன்னதாகக் கூறினார்.

எனினும், இந்த வீடியோ வைரலாகிய பின்னர், குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறை மற்றும் செங்கோட்டை சம்பவத்திலிருந்து ராகேஷ் டிக்கைட் இப்போது விலகிவிட்டார். கோட்டையில் வன்முறையையும், கொடியையும் கட்டியவர்கள் தங்கள் செயல்களுக்கு உரிய விலை வேண்டியிருக்கும் என டிக்கைட் கூறினார்.

டெல்லியின் பாதைகள் தெரியாத படிக்காதவர்கள் டிராக்டர்களை ஓட்டியதால் தான் பாதையிலிருந்து  நேர்ந்ததாக டிக்கைட் குறிப்பிட்டுள்ளார்.

“படிக்காதவர்கள் டிராக்டர்களை ஓட்டுகிறார்கள், டெல்லியின் பாதைகள் அவர்களுக்குத் தெரியாது. டெல்லி செல்லும் வழியை நிர்வாகம் அவர்களிடம் கூறியது. அவர்கள் டெல்லிக்குச் சென்று மீண்டும் தங்கள் இடங்களுக்குத் திரும்பினர். அவர்களில் சிலர் அறியாமல் செங்கோட்டையை நோக்கி திசை திருப்பினர். காவல்துறையினர் திரும்பி வர வழிகாட்டினர். அவர்கள் திரும்பி வந்தனர்.” என டிக்கைட் மேலும் கூறினார்.

Views: - 0

0

0