பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றவருக்கு நேர்ந்த பரிதாபம்… பீகாரில் அதிர்ச்சி சம்பவம்…

Author: kavin kumar
26 August 2021, 5:53 pm
Quick Share

பாம்புக்கு ராக்கி கட்டும்போது கொத்தியதில் பாம்பாட்டி உயிரிழந்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சகோதரர்களின் கையில் ராக்கி கயிறை கட்டி சகோதரிகள் தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், பீகாரில் பாம்பாட்டி ஒருவர், தன்னுடன் இருக்கும் இரண்டு பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்டி தன் பாசத்தை வெளிப்படுத்த நினைத்துள்ளார்.இதன்படி, பாம்புகளுக்குக் குங்குமம் வைத்து, ராக்கி கட்ட முயன்றுள்ளார் பாம்பாட்டி. அப்போது ஒரு பாம்பு திடீரென பாம்பாட்டியின் காலில் கடித்துள்ளது. இருப்பினும் பாம்புகளை விடாமல் கையில் பிடித்துக்கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது.

இதனை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பீதியில் பார்த்தபடி இருக்கின்றனர். தொடர்ந்து, அந்த பாம்பாட்டியை மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்புகளின் மீது அதிக நாட்டம் கொண்ட அந்த நபர், பாம்பு கடித்தவர்களை குணப்படுத்தியும் வந்துள்ளார். இப்படி பாம்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், ரக்ஷா பந்தன் தினத்தில் பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்ட விரும்பியுள்ளார். ஆனால், அதுவே அவரது உயிரை பறிக்கும் அளவு சோகமான சம்பவமாக மாறியுள்ளது.

Views: - 341

0

0