முடிவுக்கு வந்த 28 ஆண்டுகால உண்ணா நோன்பு..! ராமர் கோவில் கட்டுமானத்திற்காக மத்திய பிரதேச பெண்ணின் பிரார்த்தனை..!

4 August 2020, 4:30 pm
Urmila_Chaturvedi_Updatenews360
Quick Share

இந்துக்களின் நீண்ட கால கனவான அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை பூமி பூஜை நடக்க உள்ள நிலையில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் வசிக்கும் ஊர்மிளா சதுர்வேதி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

1992’ல் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஊர்மிளா சதுர்வேதி சாப்பிடுவதை கைவிட்டார். வன்முறையால் வருத்தப்பட்ட அவர்  ராமர் கோவிலின் கட்டுமானம் தொடங்கும் போது மட்டுமே தான் உணவை உட்கொள்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

ஊர்மிளா சதுர்வேதி 1992 டிசம்பர் 06 முதல் பழங்கள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றை மட்டுமே உண்டு உயிர் வாழ்கிறார். அவர் தனது பெரும்பாலான நேரங்களை பிரார்த்தனை செய்வதற்கும் ராமாயணத்தை ஓதுவதற்கும் செலவிடுகிறார்.

ஊர்மிளா தற்போது அயோத்தியைப் பார்வையிடவும், பகவான் ராமரிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றபின் மீண்டும் உணவை உட்கொள்ளவும் விரும்புகிறார்.

நாளை பூமி பூஜை விழாவுக்குப் பிறகு அயோத்திக்குச் செல்லவும், சரயு ஆற்றில் நீராடியபின் உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்ளவும் அவள் திட்டமிட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்களும் ஊர்மிளாவுடன் அயோத்திக்கு செல்கிறார்கள்.

Views: - 0 View

0

0