உலக பாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு: தெலங்கானா மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

Author: Aarthi
26 July 2021, 11:39 am
Quick Share

புதுடெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோவிலை ‘யுனெஸ்கோ’ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

Kakatiya Rudreshwara - Ramappa Temple - Telangana- Dinamani

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம் பாலம் பேட்டில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ராமப்பா கோவில் உள்ளது. இந்த கோவில் காகத்திய வம்ச மன்னர்களால் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த கோவில் சிற்ப வேலைப்பாடுகளுக்காகச் சிறப்புப் பெற்றது.

latest tamil news

இந்தக் கோயிலின் மூலவர் ராமலிங்கேஸ்வரர் ஆவார். இந்தக் கோயிலை வடிவமைத்த கட்டடக் கலைஞர் ராமப்பாவின் பெயரால் இந்தக் கோயில் அறியப்படுகிறது. மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம்பெறுவதற்காக இந்தக்கோயிலைப் பரிந்துரைத்திருந்தது

Kakatiya Rudreshwara - Ramappa Temple - Telangana- Dinamani

இப்போது உலக பாரம்பரிய சின்னமாக இந்தக் கோயிலை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி டிவிட்டரில், யுனெஸ்கோ ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதல், ஆதரவுக்காக அவருக்கு தெலங்கானா மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

படிமம்:Ramappa Temple 02.jpg - தமிழ் விக்கிப்பீடியா

இதுகுறித்து பிரதமர் மோடி, தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள். காகத்திய வம்சத்தின் சிறப்பான கைவினைத் திறனை ராமப்பா கோயில் வெளிப்படுத்துகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தைப் பார்வையிட வருமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Views: - 244

1

0