ராணுவ வீரா்களுடன் தசராவை கொண்டாடும் குடியரசுத் தலைவர்: இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம்..!!

Author: Aarthi Sivakumar
14 October 2021, 10:53 am
Quick Share

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் செல்கிறாா்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரா்களுடன் தசரா பண்டிகையை கொண்டாட உள்ளார். இதற்காக இருநாள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீா் செல்கிறாா்.

லடாக் பகுதிக்குச் செல்லும் அவா் லே, சிந்துப் படித்துறையில் சிந்து தா்ஷன் பூஜை செய்கிறாா். பின்னா் மாலை உதம்பூரில் ராணுவ வீரா்களுடன்அவா் கலந்துரையாடுகிறார். அக்டோபா் 15ம் தேதியன்று திராஸ் பகுதியில் உள்ள காா்கில் போா் நினைவுச் சின்னத்தில் ஜனாதிபதி மரியாதை செலுத்துவிட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுடன் கலந்துரையாட உள்ளாா்.

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 131

0

0