கொக்கை உச்சாவில் குளிப்பாட்டிய காண்டாமிருகம்! என்ஜாய் செய்த கொக்கு

19 January 2021, 9:38 am
Quick Share

காண்டாமிருகம் ஒன்று மேய்ந்து கொண்டிருக்கும் போது, அதன் பின்புறம் நின்ற கொக்கின் மேல் சிறுநீர் கழித்தது. இதனை உல்லாசமாக கொக்கு அனுபவிக்க, அந்த போட்டோ, உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

நைரோபியில் வசிக்கும் நாகராஜ் திலகராஜ் என்பவர், நைரோபி தேசிய பூங்காவிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவர் கண்ட ஆச்சரியமான காட்சியை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவி வருகிறது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மட்டுமன்றி, உலகின் பல மீடியாக்களிலும் வெளிவந்து புருவத்தை உயர்த்த செய்துள்ளது.

காட்டு விலங்கான காண்டாமிருகத்தின் இனப்பெருக்க உறுப்பு, சிறிது பின்னோக்கி வளைந்திருக்கும் என விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தமது துணையை ஈர்க்கும் விதத்தில், சிறுநீரை பின்னோக்கி வேகமாக பீய்ச்சி அடிக்கும் குணம் காண்டாமிருகத்துக்கு உள்ளது. சுமார் 16 அடி தூரம் வரை இந்த சிறுநீர் துளிகள் செல்லுமாம்.

தேசிய பூங்காவில் உள்ள காண்டாமிருகம் ஒன்று, மேய்ந்து கொண்டே சிறுநீர் கழிக்கும் போது, அதன் பின்புறம் கொக்கு ஒன்று நின்றிருந்தது. சிறுநீரை கொக்கின் மேல், வேகமாக பீய்ச்சி அடித்தது. இதற்கு எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், அப்படியே நின்று, கொக்கு அத்தருணத்தை அனுபவிப்பதாக அந்த போட்டோ அமைந்துள்ளது. திடீரென நிகழ்ந்த அச்சம்பவத்தை, நாகராஜ் போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த புகைப்படம் எதிர்பாராமல் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, அந்த கொக்கு அந்த இடத்தை விட்டு நகராமல், பாத்ரூம் சவரில் மனிதர்கள் குளிப்பதுபோல் இருந்தது என் ரசனையை தூண்டியது’ என்றார்.

Views: - 0

0

0