கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோரிக்கு மீண்டும் சம்மன்

18 November 2020, 7:54 pm
Quick Share

மதரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகை கங்கனா ரணாவத் சகோதரி ரங்கோலி சான்டலுக்கு மும்பை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகள் மூலம் பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக 2 பேர் மீதும் பாந்த்ரா காவல்நிலையத்தில் அக்டோபர் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் வரும் 23, 24ம் தேதிகளில் நேரில் ஆஜராகும்படி கங்கனாவிற்கும் ரங்கோலி சான்டலுக்கும் பாந்த்ரா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.