தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மனம்கவர்ந்த 27 வயது இளைஞர்: யார் இந்த சாந்தனு நாயுடு?
Author: Aarthi Sivakumar17 January 2022, 6:03 pm
தொழிலதிபர் ரத்தன் டாடாவுடன் பணிபுரிவது பெரும்பாலான இளைஞர்களின் வாழ்நாள் கனவாக இருக்கலாம். இந்த கனவுடன் இருந்த இளைஞர் ஒருவருக்கு விபத்து ஒன்றின் மூலம் இந்த கனவு நிறைவேறியுள்ளது.
ஆம். புனேவை சேர்ந்த 27 வயது இளைஞர் தான் ஷாந்தனு நாயுடு. சொந்த ஊரான புனேவுல ஒருநாள் இரவு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு போறப்போ நெடுஞ்சாலை ஓரம் சுற்றித்திரியும் தெரு நாய் ஒன்று சாலையோரம் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளது. சாலையோரம் சுற்றித்திரியும் நாய்கள் சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்துபோவது குறித்து சாந்தனு கவலை அடைந்துள்ளார்.
இதற்கு தீர்வு கண்டுபிடிக்க ஒரு ப்ராஜெக்ட்ல இறங்குறார். விபத்துகளில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களிடம் இதுகுறித்து பேசும்போது சாந்தனுவுக்கு ஒரு விஷயம் தட்டுப்படுகிறது. அதாவது நாய்கள் இருட்டில் சாலையை கடக்கும் அதன்மீது மோதமால் இருக்க ஓட்டுநர்களுக்கு குறைந்த நேரமே கிடைக்கிறது. இங்க பிரச்சனை என்னவென்றால் visibility and timing.
முன்கூட்டியே நாய்கள் க்ராஸ் பண்ண வருவது தெரிந்தால் அவைகளின் உயிரை ஈஸியாக காப்பாற்ற முடியும் என்பது தான் அந்த யோசனை. சாந்தனு ஒரு டிசைன் இன்ஜீனியர் என்பதால் ஒரு வழியை கண்டுபிடிக்கிறார். நாய்களின் காலரில் ஒரு டெனிம் துணியை ஒரு refelctive மெட்டீரியலில் ஒட்டி காலர்களை உருவாக்குகிறார். இந்த ப்ராஜெக்ட்டின் பெயர்தான் Motopaws.
இந்த ப்ராஜெக்ட் ஒர்க்அவுட் ஆக ஆரம்பித்ததும் இதுகுறித்து, ரத்தன் டாடாவிடம் தெரிவித்து நிதி திரட்ட முயற்சிக்கிறார் ஷாந்தனு நாயுடு. ஆனால், அது உடனடியாக கைகொடுக்காமல் போக, காத்திருந்த சாந்தனுவுக்கு சில நாட்களுக்குப் பிறகு நாயுடு தொழிலதிபரைச் சந்தித்தபோது, டாடா, ஒரு நாய் பிரியர், அவர் தனது இந்த புதிய முயற்சி ஆழமாகத் தொட்டதாக அவரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர் தனது நாய்களைப் பார்க்க நாயுடை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார், அப்படித்தான் இவர்களின் நட்பு தொடங்கியது. டாடா நிறுவனமும் அவர்களின் முயற்சிக்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டது.
இதுமட்டுமின்றி பல்வேறு ஐடியாக்களை பகிர பகிர காலப்போக்கில் இருவரது எண்ணமும் ஒருசேர டாடாவின் எதிர்காலம் சாந்தனுவாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, ரத்தன் டாடாவின் உதவியாளராகிறார் 27 வயது சாந்தனு நாயுடு. மேலும், கோவிட்-19 லாக்டவுன் மத்தியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக ‘On Your Sparks’என்ற ஆன்லைன் டால்க் ஸ்டார்ட்அபை தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் அவர் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தொழில்முனைவோர்களுக்கு பாடங்களை வழங்கி வருகிறார். கார்னெல் பல்கலைக்கழகத்தின் எம்பிஏ பட்டதாரியான சாந்தனு நாயுடு, ரத்தன் டாடாவுக்கு இரண்டு ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார்.
நாயுடு, ‘ஆன் யுவர் ஸ்பார்க்ஸ்’ வெபினாருக்கு ஒரு நபருக்கு ரூ. 500 வசூலிக்கிறார், அதில் கிடைக்கும் வருமானம் Motopaws நிறுவனத்திற்குச் செல்கிறது. Motopaws இன்று 20 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் நான்கு நாடுகளில் வளர்ச்சியடைந்துள்ளது.
முதுகலை படிப்பதற்காக நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது, சாந்தனு நாயுடு டாடாவிடம் திரும்பி வந்து டாடா அறக்கட்டளையில் பணியாற்றுவதாக உறுதியளித்தார். அவரது கோரிக்கையை டாடா ஏற்றுக்கொண்டார். “நாயுடு இந்தியாவுக்குத் திரும்பி வந்தவுடன், டாடா எனக்கு நாயுடுக்கு போன் செய்து, ‘எனக்கு என் அலுவலகத்தில் நிறைய வேலைகள் உள்ளன. நீங்கள் என் உதவியாளராக இருக்க விரும்புகிறீர்களா?’என்று கேட்டுள்ளார். அப்போது, சாந்தனு நாயுடும் ஒப்புக்கொண்டார்.
இது சாந்தனு நாயுடுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.என்னுடைய வயதுடையவர்கள் சரியான நண்பர்கள், சரியான வழிகாட்டி மற்றும் சரியான முதலாளியைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுகிறார்கள். ஆனால் இந்த மனிதர்கள் அனைவரையும் மிஸ்டர் ரத்தன் டாடா என்ற ஒரு மனிதாபிமானத்தில் நான் கண்டேன் என்று கூறி நெகிழ்கிறார் சாந்தனு நாயுடு.
சமீபத்தில், ரத்தன் டாடாவின் பிறந்தநாளை மிக எளிமையாக மகிழ்ச்சியுடன் ஒரு இளைஞருடன் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலானது. ரத்தன் டாடாவுக்கு வாஞ்சையுடன் கேக் ஊட்டும் அந்த இளைஞர் தான் இந்த சாந்தனு நாயுடு.
0
0