தெலங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் உயர்வு…!!
23 November 2020, 2:16 pmதெலங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் விகிதம் 95.20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதுகுறித்து, தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெலங்கானாவின் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,64,128 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 8,942 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று காரணமாக 3 பேர் புதிதாக உயிரிழந்துள்ளதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 1,015 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,51,468 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் விகிதத்தை தேசிய அளவோடு ஒப்பிடும்போது 93.7 சதவிகிதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0