பொறியியல் மேற்படிப்புக்கான கேட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு…!!

By: Aarthi
13 October 2020, 5:49 pm
gate - updatenews360
Quick Share

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத்தேர்வுக்கு தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க, மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு கேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 25 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வு பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வுக்குத் தாமதமான கட்டணத்துடன் விண்ணப்பிக்கக் கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாணவர்கள் அக்டோபர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கேட் தேர்வை நடத்தும் ஐஐடி பாம்பே அறிவித்துள்ளது.

Views: - 44

0

0