“இறந்து போனது நான் தான், ஆனால் நான் பேய் இல்லை” பரபரப்பைக் கிளப்பிய முதியவர்.

21 January 2021, 8:42 am
Quick Share

“சார், நான் உயிருடன் தான் இருக்கிறேன், நான் பேய் இல்லை” என்ற போர்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உ.பி மாநிலம் அமோய் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் போலா சிங், இவரது தந்தைக்கு வாங்கிய இடத்தை தனது இரண்டு மகன்களுக்கும் எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் போலா சிங் இறந்துவிட்டதாகக் கூறி போலாசிங்கின் சகோதரர் அந்த இடத்தை மாவட்ட நிர்வாக அதிகாரிகளைக் கொண்டு அதை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டுவிட்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமோய் கிராமம் உள்ள மிர்சாப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு 65 வயது முதியவர் ஒருவர் “சார், நான் உயிருடன் தான் இருக்கிறேன். நான் மனிதன் தான் பேய் இல்லை” என ஒரு போர்டை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவரின் நூதனமான இந்த போர்டு பலரது கவனத்தை ஈர்த்தது. ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் தான் போலா சிங் எனவும் தன் சகோதரர் தன்னை ஏமாற்றித் தான் இறந்துவிட்டதாகக் கூறி தனது இடத்தை அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் போலா சிங் இறந்து போனதற்கான சான்றிதழைக் கொடுத்துத் தான் அவரது சகோதரர் அந்த இடத்தை மாற்றியுள்ளார். இதனால் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தில் “நான் உயிருடன் உள்ளேன்” என்ற போர்புடன் அமர்ந்திருந்த முதியவரை அமோய் கிராமத்திற்கு அழைத்து அங்குத் தனது வீடு, சகோதரர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அடையாளம் காட்டச் சொல்லியுள்ளனர். ஆனால் அந்த முதியவருக்கு யாரையும் அடையாளம் காட்டத் தெரியவில்லை. அவர் தான் இந்த கிராமத்தை விட்டுச் சென்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், தற்போது யாரையும் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார். அதே போல அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கும் இவரை அடையாளம் தெரியவில்லை.

இதனால் இந்த வழக்குத் தீர்க்க முடியாத பிரச்சனையாக மாறியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தற்போது போலா சிங் எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் முதியவருக்கும், போலா சிங்கின் சகோதரருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இவர்களுக்குள் இருக்கும் உறவு அறிவியல் பூர்வமாகத் தெரிந்துவிடும் என்பதால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இறந்து போனதாகச் சான்று வழங்கப்பட்ட ஒருவர் ரமணாபட பாணியில் உயிருடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 0

0

0