வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: 5 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்…மீட்பு பணியில் ராணுவம், விமானப்படை!!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 9:04 am
Quick Share

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடிக்கும் என வானிவை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் மாநிலம் முழுவதும், குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய கேரள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம் இடமலையாறு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இடமலையாறு அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலையின் ஒரு பகுதி இடிந்து சரிந்து விழுந்தது. இதனால் ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.

இதையொட்டி தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் முகாமிட்டுள்ளனர். கோட்டயம் மாவட்டம், முண்டகாயம் அருகே குட்டிக்கல் பகுதியில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவால் அங்கிருந்த சில வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இந்த சிக்கி அந்த பகுதியை சேர்ந்த தாய்-மகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணிக்கு கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் கேரளா விரைந்தது.

இடுக்கி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றுப்பாலத்தில் சென்ற கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம்புகுந்ததால் மக்கள் வீடுகளின் மேல் கூரை மீது ஏறி அமர்ந்து உள்ளனர்.

கருவாமொழி ஆற்று பாலத்தின் அருகே வசிக்கும் 15 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. அதேநேரம் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது.

Views: - 267

0

0