செங்கோட்டை வன்முறையின் முக்கிய குற்றவாளி தீப் சித்து கைது..! டெல்லி போலீசார் அதிரடி..!

9 February 2021, 10:31 am
Deep_Sidhu_Updatenews360
Quick Share

ஜனவரி 26 குடியரசு தினத்தின்போது, டிராக்டர் பேரணி எனும் பெயரில் செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி 26’ம் தேதி உழவர் சங்கங்கள் மேற்கொண்ட டிராக்டர் அணிவகுப்பின் போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் காவல்துறையினருடன் மோதினர். 

எதிர்ப்பாளர்கள் பலர், டிராக்டர்களை ஓட்டிச் சென்று, செங்கோட்டையை அடைந்து முக்கியப் பகுதிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். சில ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் குவிமாடங்களில் மதக் கொடிகளையும், கோட்டைகளில் ஒரு கொடியையும் ஏற்றி வைத்தனர். 

இந்நிலையில் டிராக்டர் அணிவகுப்பின் போது குடியரசு தினத்தன்று செங்கோட்டையைத் தாக்க விவசாயிகள் குழுவைத் தூண்டியதாக பஞ்சாபி நடிகர் தீப் சித்து மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆரில் அவர் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் குறிப்பிடப்பட்டுள்ளார். செங்கோட்டை வன்முறையின் வீடியோ காட்சிகளில் சித்து காணப்பட்டார். அன்றிலிருந்து அவர் தலைமறைவாக இருந்தார்.

செங்கோட்டை வன்முறை தொடர்பாக சித்து மற்றும் மூன்று பேரை கைது செய்ய, அவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு கடந்த வாரம் போலீசார் ரூ 1 லட்சம் ரொக்க வெகுமதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி காவல்துறையின் டி.சி.பி சஞ்சீவ் யாதவ் தலைமையிலான குழுவின் நடவடிக்கையில் சித்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தீப் சித்து கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு பெண் நண்பர் மற்றும் நடிகருடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் வீடியோக்களை உருவாக்கி கலிபோர்னியா பெண்ணுக்கு அனுப்பி, அந்த பெண் பின்னர் அவற்றை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றி வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Views: - 0

0

0

1 thought on “செங்கோட்டை வன்முறையின் முக்கிய குற்றவாளி தீப் சித்து கைது..! டெல்லி போலீசார் அதிரடி..!

Comments are closed.