பெட்ரோல் அளவு குறைத்து வழங்கி நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடி : 3 நிலையங்களுக்கு சீல்!!

5 September 2020, 4:26 pm
Petrol Bunk Seal - Updatenews360
Quick Share

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடி செய்தது உறுதியானநிலையில் 3 பெட்ரோல் நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பிடிக்கும்போது பங்க் உரிமையாளர்கள் குறைவான அளவில் பெட்ரோல் வரும் வகையில் ஏற்பாடுகளை செய்து மோசடியில் ஈடுபடுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தன.

தகவல்கள் அடிப்படையில் ஹைதராபாதில் பாஷா என்பவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு மாநிலங்களிலும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது தெரியவந்தது.

ஹைதராபாத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சித்தூர் எஸ்.பி.செந்தில்குமார் சித்தூர் நகரில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். சித்தூர் டி எஸ் பி ஈஸ்வர் ரெட்டி தலைமையில் போலீசாரும், எடை மற்றும் அளவு துறையினருமெ சித்தூரில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் சோதனை நடத்தினர்.

அப்போது நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடியாக தயார் செய்யப்பட்ட மைக்ரோ சிப் ஒன்றை பெட்ரோல் பிடிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் பொருத்தி அதன் மூலம் ஒரு லிட்டருக்கு 40 மில்லி லிட்டர் குறைவான அளவில் பெட்ரோல் வெளி வரும் வகையில் ஏற்பாடுகளை செய்து வாடிக்கையாளர்களை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 பெட்ரோல் பங்குகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மீது இபிகோ 420 சட்டத்தின் அடிப்படையில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க் மோசடிகளில் சூத்திரதாரியாக சித்தூரில் பெட்ரோல் பங்க் நடத்தும் வேலூரை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் ஹைதராபாதில் கைதுசெய்யப்பட்ட பாஷா உடன் சேர்ந்து செயல்பட்டதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது

Views: - 0

0

0