நாட்டை விட வணிகமா முக்கியம்..? இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சிஜன் உற்பத்தி மையமாக மாறிய ரிலையன்ஸ் நிறுவனம்..!

1 May 2021, 6:20 pm
reliance_covid_oxygen_updatenews360
Quick Share

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை ஒரு நாளைக்கு 1,000 மெட்ரிக் டன்களாக உயர்த்தியுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய அளவிலான மருத்துவ தர திரவ ஆக்சிஜனை ஒரே இடத்தில் இருந்து உற்பத்தி செய்கிறது.

மருத்துவ தர ஆக்சிஜன் உற்பத்தியில் இதற்கு முன் ஈடுபடாத ரிலையன்ஸ், ஜாம்நகரில் உள்ள தனது உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், இதர வர்த்தக செயல்பாடுகளை குறைத்து, ஒரு நாளைக்கு பூஜ்ஜியத்திலிருந்து 1,000 டன்னாக உற்பத்தியை அதிகரித்து தேச நலனிற்கு பிறகு தான் வணிகம் என்பதை நிரூபித்துள்ளது. இந்த சேவையை எந்த லாப நோக்கமும் இல்லாமல் தனது நிறுவனத்தின் சமூக பொறுப்பின் கீழ் அரசுக்கு இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இப்போது நாட்டின் ஆக்சிஜன் தேவையில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக ரிலையன்ஸ் உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு நாளும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய அதன் வளங்களை அது திரட்டியுள்ளது.

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மருத்துவ தர திரவ ஆக்சிஜனின் உற்பத்தியை ஒரு நாளைக்கு பூஜ்ஜியத்திலிருந்து 1000 மெட்ரிட் வரை உயர்த்தியுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாளும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 1,000 மெட்ரிட் ஆக்சிஜனை உருவாக்குகிறது” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

குஜராத்தின் ஜாம்நகரில் மேற்கொள்ளப்படும் இந்த மருத்துவ தர ஆக்சிஜனின் உற்பத்தி மற்றும் போக்குவரத்தின் அளவை ஆர்ஐஎல் தலைவர் முகேஷ் அம்பானி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார்.

ஏப்ரல் மாதத்தில், ரிலையன்ஸ் 15,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இலவசமாக வழங்கியது. இது கிட்டத்தட்ட 15 லட்சம் நோயாளிகளுக்கு உதவியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, ரிலையன்ஸ் நாடு முழுவதும் 55,000 மெட்ரிக் டன் மருத்துவ தர திரவ ஆக்சிஜனை வழங்கியுள்ளது.

இந்த முயற்சிகள் குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கூறுகையில், “எனக்கும் ரிலையன்ஸில் உள்ள அனைவருக்கும், கொரோனா தொற்றுநோயின் புதிய அலைக்கு எதிராக இந்தியா போராடுவதால் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதை விட முக்கியமானது எதுவுமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 234

0

0

Leave a Reply