ஜம்மு காஷ்மீர் வரை நீண்ட சதிவலை..! குடியரசு தின வன்முறையில் ஜம்முவைச் சேர்ந்த இருவர் கைது..!

23 February 2021, 11:13 am
R_Day_Violence_Two_Persons_Arrested_Jammu_UpdateNews360
Quick Share

குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது, டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு இரண்டு பேரை கைது செய்துள்ளது. அவர்களில் ஒருவர் ஜம்முவைச் சேர்ந்த ஒரு முக்கிய விவசாயி சங்கத் தலைவர் ஆவார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஜனவரி 26’ஆம் தேதி உழவர் சங்கங்கள் அழைத்த டிராக்டர் அணிவகுப்பின் போது ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் டெல்லியில் போலீசாருடன் மோதினர்.

எதிர்ப்பாளர்கள் பலர் செங்கோட்டையை அடைந்து வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னத்திற்குள் நுழைந்தனர். அவர்களில் சிலர் மதக் கொடிகளை அதன் குவிமாடங்களிலும், கோபுரங்களிலும் ஏற்றினர்.  

இந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை ஏற்கனவே சிலரைக் கைது செய்துள்ள நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான விவசாய சங்கத் தலைவர் மொஹிந்தர் சிங் கல்சா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் யுனைடெட் கிசான் முன்னணியின் தலைவராக மொஹிந்தர் சிங் கல்சா உள்ளார்.

இவர் ஜம்மு நகரத்தின் சாதா பகுதியில் வசிப்பவர். இரண்டாவது நபர் ஜம்மு கோலே குஜ்ராலில் வசிக்கும் மந்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜனவரி 26’ஆம் தேதி விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது செங்கோட்டையில் நடந்த வன்முறையில் அவர்கள் தீவிரமாக பங்கேற்றதோடு, அவர்கள் இருவரும் முக்கிய சதிகாரர்கள் ஆவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு மொஹிந்தர் மற்றும் கோல் இருவரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக உடனடியாக டெல்லிக்கு மாற்றப்பட்டதாக டெல்லி காவல்துறை அதிகாரி அனில் மிட்டல் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் ஆதரவுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

“கிடைத்த தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வன்முறையில் தீவிரமாக பங்கேற்றனர் என்றும் செங்கோட்டையில் நடந்த கலவரத்தில் முக்கிய சதிகாரர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.” என்று மிட்டல் கூறினார்.

Views: - 13

0

0