ஆப்கனில் இருந்து மேலும் 78 இந்தியர்கள் மீட்பு: ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வருகை..!!

Author: Aarthi Sivakumar
24 August 2021, 8:48 am
Quick Share

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு தஜிகிஸ்தானில் தங்கவைக்கப்பட்ட 25 இந்தியர்கள் உள்பட 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து இருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானிய மக்களையும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீட்டு வருகின்றனர்.

மேலும், ஆப்கன் மக்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவால் மீட்கப்பட்ட 25 இந்தியர்கள் உள்பட 78 பேர் தஜிகிஸ்தானில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தஜிகிஸ்தானில் தங்கவைக்கப்பட்டிருந்த 25 இந்தியர்கள் உள்பட 78 பேரும் இன்று இந்தியா வந்தடைந்தனர். அவர்கள் தஜிகிஸ்தானில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர்.

முன்னதாக, 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் இருந்து இந்திய விமானங்கள் மூலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 293

0

0