காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சித் தொடங்கிய அமரீந்தர் சிங்..! அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி..???

Author: kavin kumar
2 November 2021, 7:43 pm

Punjab Chief Minister Captain Amarinder Singh.

Quick Share

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தைச் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள அமரீந்தர் சிங், ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற பெயரில் புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நவஜோத் சிங் சித்துவுடனான உட்கட்சி மோதலின் காரணமாக அண்மையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸில் இருந்து விலகியது தொடர்பாக பேசிய அமரீந்தர் சிங், “காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன். ஆனால், பாஜகவில் இணையமாட்டேன். புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசித்து கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அமரீந்தர் சிங் தனது 7 பக்க ராஜினாமா கடிதத்தை முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமரீந்தர் சிங் தனது புதிய அரசியல் கட்சியை இன்று தொடங்கினார்.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் ராஜினாமாவிற்கான காரணங்களைத் தொகுத்து இணைத்துள்ளார்.இது தொடர்பாக அமரீந்தர் சிங் கூறியுள்ளதாவது:-”காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது ராஜினாமாவை அனுப்பி வைத்துள்ளேன். ராஜினாமாவிற்கான காரணங்களை அதில் பட்டியலிட்டுள்ளேன். பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளேன். கட்சிக்கான பதிவு அனுமதி நிலுவையில் உள்ளது. கட்சியின் சின்னம் பின்னர் அங்கீகரிக்கப்படும்”.இவ்வாறு அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில், அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் அமரீந்தர் சிங் கைகோர்க்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.

Views: - 254

0

0