கொரோனா தொற்று பரவும் அபாயம்: டெல்லியில் மீண்டும் மூடப்பட்டது காய்கறி சந்தை..!!

Author: Aarthi Sivakumar
30 June 2021, 1:31 pm
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் லட்சக் கணக்கானோர் கூடும் லட்சுமி நகர் காய்கறி மற்றும் பல்பொருள் விற்பனை சந்தை கொரோனா பரவலால் மீண்டும் மூடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தொடர் பரிசோதனை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றால் கோவிட் 2வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் வந்தது. தலைநகரான டெல்லியிலும் தொற்று பாதிப்பு மூன்று இலக்கங்களுக்குள் குறைந்து உள்ளது.

Delhi_Lockdown_UpdateNews360

அதனால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லி லட்சுமி நகர் பல்பொருள் சந்தையில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கோவிட் விதிகள் மீறப்பட்டதால் அப்பகுதியில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது.

தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் அந்த சந்தையை ஜூலை 5ம் தேதி வரை மூட டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Views: - 210

0

0