“போதைப்பொருள் வாங்கியது உண்மைதான், ஆனால்..”..! என்சிபியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ரியா சக்ரவர்த்தி..?
6 September 2020, 7:57 pmசுஷாந்த் சிங் வழக்கில் ஒரு பெரிய திருப்பமாக, நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திடம் (என்சிபி) தான் போதைப்பொருள் வாங்கியது உண்மைதான் என ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவற்றை ஒருபோதும் உட்கொள்ளவில்லை என்று ரியா தெரிவித்துள்ளார்.
28 வயதான அவர் மதியம் 12 மணிக்கு பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள என்சிபி அலுவலகத்திற்கு வந்து விசாரணையில் கலந்து கொண்டார். நாளையும் அவர் விசாரணைக்கு என்.சி.பியால் வரவழைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது விசாரணையின் போது, ரியா, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி, சுசாந்தின் வீட்டு உதவியாளர் தீபேஷ் சாவந்த் மற்றும் மறைந்த நடிகரின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோருக்கு இடையே குறுக்கு விசாரணை நடந்ததாக தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் குற்றவியல் பிரிவுகளின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டபோது மொத்தம் 8 பேர் இந்த விசாரணையில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை செப்டம்பர் 9 வரை 4 நாட்கள் மும்பை நீதிமன்றம் ரிமாண்ட் செய்த ஒரு நாள் கழித்து இந்த விஷயம் வெளியே வந்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரியா சக்ரவர்த்தி எந்நேரமும் என்சிபியால் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
0