சூறையாடப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம் : ஒய்எஸ்ஆர் காங்கிரசை கண்டித்து சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2021, 11:53 am
Chandrababu Naidu Fasting -Updatenews360
Quick Share

ஆந்திரா : தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகத்தை தாக்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து சந்திரபாபுநாயுடு இன்று முதல் 36 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளரான பட்டாபிராமன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் விஜயவாடா அருகே மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைமை அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தினர்.

இதைக் கண்டித்து முப்பத்தி ஆறு மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு துவக்கினார்.

தாக்குதலில் சேதமடைந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி சந்திரபாபு நாயுடு நாளை இரவு 8 மணிக்கு போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்க அக்கட்சித் தொண்டர்கள் ஏராளமான அளவில் மங்களகிரிக்கு திரண்டு செல்கின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மங்களகிரி செல்லும் வழி முழுவதும் சாலைகளில் தடுப்புகளை போலீசார் அமைத்து வருகின்றனர்.

Views: - 228

0

0