கடலில் விழுந்தவர்களை மீட்க ரோபோடிக் லைப் பாய் : கடற்படை உதவியுடன் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஏற்பாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 10:06 pm
Robotic Lifeboy - Updatenews360
Quick Share

கடலில் குளிக்கும் போது ராட்சத அலைகளால் எதிர்பாராதவிதமாக இழுத்துச் செல்லப்படுபவர்களை மீட்க கடற்படை உதவியுடன் தயாரிக்கப்பட்ட ரோபோட்டிக் லைஃப் பாய் மீட்பானை விசாகப்பட்டினம் மாநகராட்சி கடற்கரையில் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் மூலம் யாராவது குளிக்கும் போது கடலில் அலைகளால் இழுத்து செல்லப்பட்டால் அங்கு பணியில் இருக்கும் மாநகராட்சி மீட்பு குழுவினர் ரிமோட் மூலம் இயக்கப்படும் அந்த ரோபோடிக் லைப் பாயை கடலில் வீசி எறிந்து அது அலைகளுக்கு இடையே தத்தளித்து கொண்டிருக்கும் நபரை நோக்கி ரிமோட் மூலம் செலுத்துவார்கள்.

அதனை பிடித்து கொண்டு அந்த நபர் கரை ஏறி உயிர் பிழைக்கலாம். இதற்கான சோதனை ஓட்டம் விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது.

Views: - 145

0

0