ஆந்திராவில் செம்மரம் கடத்திய கும்பல் : தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது!!

Author: Udayachandran
12 October 2020, 11:07 am
Roseweeo Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்திய 8 பேரில் தமிழகத்தை சேர்நத் இருவரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பாக்கரைப்பேட்டை அருகே உள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் நேற்று இரவு முதல் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களை வெட்டி தூக்கி வந்த 8 பேரை போலீசார் நிறுத்த முயன்றபோது அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

தப்பி ஓடிய கடத்தல்காரர்களில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்த காசி, பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து எட்டு செம்மரக்கட்டைகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 26

0

0