ரூ.1.1 லட்சம் கோடி கடன் வழங்கும் திட்டம்….மத்திய அரசே கேரண்டி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
28 June 2021, 5:01 pm
nirmala sitharaman - updatenews360
Quick Share

டெல்லி: 25 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கடன் உத்திரவாத திட்டத்தை மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பொருளாதார தூண்டுதல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தார்.

வணிக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி வருகின்றன. இதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரை கடன் வாங்குவோருக்கு அரசு கேரண்டி கொடுக்கும். இதன் மூலமாக 25 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இந்த கடனுக்கான வட்டி என்பது, வங்கியின் குறைந்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள வட்டியுடன் 2 சதவீதம் அதிகமாக இருக்கலாம்.

அதாவது, இப்போது வங்கிக்கு என்று குறைந்தபட்ச வட்டி நிர்ணயம் செய்யப்படுவதை விட 2 சதவீதம் அதிக வட்டியில் கடனை வழங்கலாம். அதிகபட்ச கடன் கால அளவு 3 வருடங்கள் ஆகும். புதிதாக கடன் வாங்குவோருக்கு அதிகப்படியாக கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கேரண்டி கொடுப்பதற்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Views: - 287

0

0