கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் : ஆந்திர அரசு அறிவிப்பு!!

17 May 2021, 11:20 am
Funerla Amount- Updatenews360
Quick Share

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து ஆந்திர சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்கை செய்ய ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கொரோனா உயிரிழப்புக்கும் இந்த நிவாரண நிதி அளிக்கப்படும் என்றும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இந்த தொகை மூலம கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நிவாரணத் தொகையை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 166

0

0