ஹைதராபாத்தில் அதிக வட்டி கொடுப்பதாக கூறி ரூ.200 மோசடி: நடிகர்கள், நடிகைகளிடம் கைவரிசை காட்டிய பெண் கைது..!!

Author: Aarthi Sivakumar
28 November 2021, 3:41 pm
Quick Share

ஐதராபாத்: அதிக வட்டி கொடுப்பதாக ஆசை காட்டி சினிமா நடிகர்கள், நடிகைகள், பைனான்சியர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் 200 கோடி ரூபாய் வரை வாங்கி மோசடி செய்த பெண் கைது.

ஐதராபாத்தில் உள்ள நர்சிங்கி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஷில்பா. அங்கு சிறு அளவிலான வியாபாரங்களில் ஈடுபட்டு வந்த ஷில்பாவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்களின் தொடர்பு கிடைத்தது.


தனக்கு கிடைத்த திரைத்துறை தொடர்பை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடிவு செய்து ஷில்பா அதிக வட்டி கொடுக்கிறேன் என்று கூறி சினிமா நடிகர்கள், நடிகைகள், பைனான்சியர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் சுமார் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷில்பாவிடம் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்த நர்சிங்கி போலீசார் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பெரும்பாலானோர் தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஷில்பாவிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது தன்னிடம் பணமே கிடையாது என்று கூறிவிட்டார். எனவே அவர் வசூல் செய்த பணத்தை என்ன செய்தார், எங்கு முதலீடு செய்திருக்கிறார். என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஷில்பாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நர்சிங் காவல் நிலையத்திற்கு வரிசையாக வர துவங்கியுள்ளனர்.

Views: - 185

0

0