9 வயது சிறுவனை கடத்தி ரூ.45 லட்சம் பேரம் : பணத்தை கொடுக்க முன் வந்தும், சிறுவன் எரித்து கொலை!!

22 October 2020, 6:08 pm
Kidnap And Murder - Updatenews360
Quick Share

தெலுங்கானா : தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் சிறுவனை கடத்தி சென்ற நபர் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து, சிறுவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுவன் தீக்‌ஷித் கடந்த ஞாயிறன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் கடத்தி செல்லப்பட்டான்.

கடத்தல் சம்பவம் நடைபெற்ற பின் இரவு 9 மணி அளவில் தீக்‌ஷித் தாய் வசந்தாவுக்கு போன் செய்த கடத்தல்காரன் 45 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே தீக்‌ஷித்தை விடுவிப்போம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட பகுதியில் இன்று இரவுக்குள் பணத்தை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் உன் மகனை கொலை செய்து விடுவேன் என்று கூறி தொலை பேசியை துண்டித்து விட்டான்.

இதனை தொடர்ந்து பல்வேறு வகையில் பணம் புரட்டிய தீக்சித் பெற்றோர் கடத்தல்காரன் குறிப்பிட்ட இடத்திற்கு பணத்துடன் சென்று விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் பணத்தை வாங்கி செல்ல யாரும் வரவில்லை.

இந்த நிலையில் மகபூப்நகர் அருகே உள்ள மலை குன்று ஒன்றில் சிறுவன் ஒருவன் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக இன்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த உடல் கடத்தப்பட்ட சிறுவன் தீக்‌ஷித் உடையது என்றும், தீக்‌ஷித்தை கடத்தி சென்றவன் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதையும் உறுதி செய்தனர்.

குற்றவாளி சாகர் புகைப்படம்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மகபூப் நகர் போலீசார் தீக்‌ஷித் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீக்‌ஷித்தை கடத்தி கொலை செய்த சாகர் என்பவ கைது செய்து விசாரனை நடத்துகின்றனர்.

Views: - 36

0

0