கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம்..! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Author: Udhayakumar Raman
22 September 2021, 8:57 pm
Quick Share

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிவாரணம் அளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ரிந்துரை செய்திருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த மனுவுக்கு தற்போது மத்திய அரசு பதில் அளித்துள்ளது.அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஐம்பதாயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பரிந்துரையை ற்று சுப்ரீம் கோர்ட்டு இது குறித்த உத்தரவை பிறப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Views: - 144

0

0