கால்நடை அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.54 கோடி ஒதுக்கீடு : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முருகன் பேட்டி!!
Author: Udayachandran RadhaKrishnan23 October 2021, 11:01 am
ஆந்திரா : உள்நாட்டு கால்நடை அபிவிருத்தி 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் நேற்று இரவு திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், 100 கோடி டோஸ் தடுப்பு மருந்து இதுவரை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
உலகில் எந்த நாடும் இந்த அளவிற்கு 100 கோடி டோஸ் தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்தவில்லை. எனவே இது சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்ட பெரும் சாதனையாகும்.
பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தொடர் முயற்சிகள், தீவிர கண்காணிப்பு, தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்கம் ஆகியவை இந்த சாதனைக்கு காரணமாகும்.
மத்திய கால்நடை அபிவிருத்தி துறை சார்பில் நாட்டு இனங்களை சார்ந்த பசுக்கள், ஆடு,கோழி ஆகியவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 54 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படும். இந்த திட்டத்தில் இணைவதற்கு தகுதியான தொழில் முனைவோர்களை அடையாளம் காண பணிகள் நடைபெறுகின்றன என்று அப்போது கூறினார்.
0
0